
செய்திகள் மலேசியா
மலேசிய ஊடக மன்றத்தின் உறுப்பினராக முத்தமிழ் மன்னன் நியமனம்
புத்ரா ஜெயா:
மலேசிய ஊடக மன்றத்தின் உறுப்பினராக மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மலேசிய ஊடக மன்றத்தின் முதல் உறுப்பினர்களாக இன்று 12 பேருக்கு பதவி நியமன சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில், துணை அமைச்சர் தியோ நிக் சிங் ஆகியோர் புத்ரா ஜெயாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த சான்றிதழ்களை வழங்கினர்.
அந்த வகையில்செ.வே.முத்தமிழ் மன்னன் இந்த மன்றத்தில் இடம் பெற்றார்.
Media owners எனப்படும் பத்திரிகை நிறுவனங்கள் சார்பில் Phyllis Wong (Utusan Borneo) , James Sarda (Sabah Publishing House), Premesh Chandran (Malaysiakini), Ashwad Ismail (Astro Awani) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
Media professionals எனப்படும் நிபுணத்துவ ஊடகவியலாளர் பிரிவில் Teh Athira Yusof (National Union of Journalists), Radzi Razak (Gerakan Media Merdeka), Ronnie Teo (Kuching Division Journalists Association), Muthameez Manan (Tamil Media Association) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Public interest representatives எனப்படும் பொதுநலப் பிரிவில் Gayathry Venkiteswaran (University of Nottingham, Malaysia), Celine Lim (SAVE Rivers), Terence Ooi (Wiki Impact), Azmyl Yunor (Sunway University) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
வரும் நவம்பர் 7 ஆம் தேதி மலேசிய ஊடக மன்றத்தின் முதலாம் ஆண்டு கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் முக்கிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தற்போது இடைக்கால தலைவராக மலேசிய கினி தோற்றுநர் பிரமேஷ் பொறுப்பேற்றுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 10:17 pm
புதிய அமெரிக்க தூதர் நிக் ஆடம்ஸ் குறித்த குறிப்பாணையை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: ஃபஹ்மி
July 15, 2025, 10:15 pm
ஆயுதத்துடன் சண்டையிட்டுக் கொண்ட 9 அந்நிய நாட்டினர் கைது: போலிஸ்
July 15, 2025, 10:14 pm
பேராசிரியர் ராமசாமியின் கடப்பிதழை நீதிமன்றம் தற்காலிகமாக விடுவித்தது
July 15, 2025, 10:12 pm
16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள நெகிரி செம்பிலான் பெர்சத்து தயாராகிறது: டத்தோ சரவணக்குமார்
July 15, 2025, 9:21 pm
நீதிபதிகள் நியமனம்; நாளை அறிவிப்பு வெளியாகலாம்: பிரதமர் நம்பிக்கை
July 15, 2025, 4:56 pm
ஹரக்கா மீது புகார் – அன்வார் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக PKR நடவடிக்கை
July 15, 2025, 4:46 pm