நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிக் ஆடம்ஸை அமெரிக்க தூதராக நியமிக்க டிஏபி மறுப்பு: அந்தோனி லோக்

பெட்டாலிங் ஜெயா:

டிஏபி, பக்காத்தான் ஹராப்பான் கட்சியுடன் இணைந்து மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க பழமைவாத பிரமுகர் நிக் ஆடம்ஸை நியமிப்பதை நிராகரிக்குமாறு மலேசிய அரசாங்கத்தை வலியுறுத்தும் என்று டிஏபியின் பொது செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

கட்சி தனது நிலைப்பாடு குறித்து உரிய நேரத்தில் ஒரு அறிக்கையை வெளியிடும் என்றார் அவர்.

அறிக்கையைத் தயாரிக்க சர்வதேச செயலாளருக்கு தகவல் தெரிவித்ததாக அவர் கூறினார்.

ஆடம்ஸின் நியமனம் நாட்டின் கண்ணியத்திற்கு ஓர் அவமதிப்பு என்றும் அந்தோனி லோக் சுட்டிக் காட்டினார்.

முன்னதாக, வியன்னா மாநாட்டின் 4-ஆவது பிரிவின் கீழ் வெளிநாட்டு தூதரை நிராகரிக்க மலேசியாவிற்கு உரிமை உண்டு என்று அம்னோ முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் முன்பு கூறியிருந்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset