
செய்திகள் மலேசியா
ஆசியானுக்கு எதிர்கால பயிற்சித் திட்டங்களை மலேசியா முன்னெடுக்கும்: டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான்
கோலாலம்பூர்:
ஆசியானுக்கு எதிர்கால பயிற்சித் திட்டங்களை முன்னெடுப்பதில் மலேசியா உறுதியாக உள்ளது.
மனிதவளத் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் முகமது இதனை கூறினார்.
பொருத்தமான, தொழில் சார்ந்த, உலகளாவிய மாற்றத்திற்கு ஏற்ற திறன் பயிற்சி முறை மூலம் ஆசியான் வட்டாரத்தில் திறன் வாய்ந்த பணியாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்.
இதன் அடிப்படையில் இப்பயிற்சிகளை முன்னெடுக்க மலேசியா உறுதியாக உள்ளது.
மலேசியாவின் இந்த முயற்சி பயிற்சியாளர்கள், பயிற்சி வழங்குநர்கள், ஒரு விரிவான, நிலையான கொள்கை கட்டமைப்பை உள்ளடக்கிய பயிற்சி சுற்று ச்சூழல் அமைப்பை வலுப்படுத்தும்.
மேலும் நாளைய வேலைகளுக்கான நேற்றைய திறன்களை இனி நாம் கற்பிக்க முடியாது. ஆக பயிற்சி முறைகள் தொழில்துறையுடன் இணைந்து உருவாக்கப்பட வேண்டும்.
2025ஆம் ஆண்டு ஆசியான் பயிற்சி மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய அவர் இதனை வலியுறுத்தினார்.
தொழில்நுட்ப பயிற்சியும் கல்வியும் இப்போது ஆசியானின் போட்டித்தன்மையின் அடித்தளமாக உள்ளன.
நாடு ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு, இலக்கவியல் பொருளாதாரம், பசுமை ஆற்றல் மாற்றத்தின் சகாப்தத்தில் போட்டித்தன்மையுடன் இருக்க விரும்பினால் அதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
பயிற்சியாளர்கள் பொருத்தமானவர்களாக இல்லாவிட்டால், பயிற்சி பயனுள்ளதாக இருக்காது. ஆக அவர்கள் பின்தங்கியிருந்தால், எங்கள் தொழிலாளர்கள் மாற்றங்களைத் தொடர்ந்து பின்பற்ற முடியாது.
2025 ஆம் ஆண்டை ஆசியான் திறன் ஆண்டாக அறிவிக்கும் மலேசியாவின் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு,
இப்போது சர்வதேச தொழிலாளர் அமைப்பு, ஆசியான் செயலகத்தின் ஆதரவுடன் அதிகாரப்பூர்வ பிராந்திய நிகழ்ச்சி நிரலாக உள்ளது என்று டத்தோஶ்ரீ அப்துல் ரஹ்மான் அறிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 10:17 pm
புதிய அமெரிக்க தூதர் நிக் ஆடம்ஸ் குறித்த குறிப்பாணையை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: ஃபஹ்மி
July 15, 2025, 10:15 pm
ஆயுதத்துடன் சண்டையிட்டுக் கொண்ட 9 அந்நிய நாட்டினர் கைது: போலிஸ்
July 15, 2025, 10:14 pm
பேராசிரியர் ராமசாமியின் கடப்பிதழை நீதிமன்றம் தற்காலிகமாக விடுவித்தது
July 15, 2025, 10:12 pm
16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள நெகிரி செம்பிலான் பெர்சத்து தயாராகிறது: டத்தோ சரவணக்குமார்
July 15, 2025, 9:21 pm
நீதிபதிகள் நியமனம்; நாளை அறிவிப்பு வெளியாகலாம்: பிரதமர் நம்பிக்கை
July 15, 2025, 4:56 pm
ஹரக்கா மீது புகார் – அன்வார் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக PKR நடவடிக்கை
July 15, 2025, 4:46 pm