நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய நிறுவன செயலாளர்கள், நிர்வாகிகள் அமைப்பின் தலைவராக டத்தோ அக்பர் மொய்துன்னி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

கோலாலம்பூர்:

மலேசிய நிறுவன செயலாளர்கள், நிர்வாகிகள் அமைப்பின் தலைவராக டத்தோ அக்பர் மொய்துன்னி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமைப்பின் 65ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்துடன் புதிய நிர்வாகத்திற்கான  தேர்வும் நடைபெற்றது.

இதில் நிறுவனங்களின் ஆலோசனை,  நிர்வாகத் துறையில் அனுபவம் வாய்ந்தவரான டத்தோ அக்பர் மொய்துன்னி மீண்டும் அவ்வமைப்பின் தலைவராக தேர்வு பெற்றார்.

இவர் 2025–2026 காலகட்டத்திற்கு மலேசிய நிறுவன செயலாளர்கள், நிர்வாகிகள் அமைப்பின் தலைவராக அவர் செயல்படுவார்.

மின்க் குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அக்பர், உள்ளூர், அனைத்துலக நிறுவனத் துறையில் குறிப்பாக ஆலோசனை, மறுசீரமைப்பு, நிறுவன நிர்வாகம் ஆகிய துறைகளில் 38 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

அக்பரின் தலைமைத்துவம் நிறுவனத்தின் தொழில்முறை சிறப்பு, தேசிய சேவை,  நம்பகத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதை தொடர்ந்து வலுப்படுத்தும்.

மலேசிய நிறுவன செயலாளர்கள், நிர்வாகிகள் அமைப்பு ஒரு தொழில்முறை அமைப்பாக அதன் பங்கிற்கு அப்பால் வளர வேண்டும்.

அது பெருநிறுவன நிர்வாகம், வாரிய நெறிமுறைகள், நிறுவன செயலகத் தலைமைத்துவம் ஆகியவற்றில் ஒரு அதிகாரபூர்வமான குரலாக மாற வேண்டும் என அவ்வமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக அமைப்பின் துணைத் தலைவராக தீபக் கவுர், உதவித் தலைவராக டாக்டர் நந்திதா சவுத்ரி, செயலாளராக பேராசிரியர் நூர்பிஜான் அபு பக்கர், பொருளாளராக லீ மி ரியோங் ஆகியோர் தேர்வு பெற்றனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset