நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊழலை எதிர்த்துப் போராடுவது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன் தேசிய நல்லிணக்கத்தை உறுதி செய்கிறது: பிரதமர்

புத்ராஜெயா:

ஊழலை எதிர்த்துப் போராடுவது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன் தேசிய நல்லிணக்கத்தை உறுதி செய்கிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிரான போராட்டம் வெறும் தார்மீகக் கடமை மட்டுமல்ல.

மாறாக வலுவான, நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான உந்து சக்தியாக அமைகிறது.

மேலும் அனைத்து வடிவங்களிலும் ஊழல் நாட்டின் பொருளாதார முன்னேற்றம், நல்லிணக்கத்திற்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது.

புத்ராஜெயாவில் நடைபெற்ற அனைத்துலக நிர்வாகம், ஒருமைப்பாடு மாநாட்டில் பேசிய பிரதமர் இவ்வாறு கூறினார்.

ஊழல் வணிகம் செய்வதற்கான செலவை அதிகரிக்கிறது. நியாயமான போட்டியைக் குறைக்கிறது. புதுமைகளைத் தடுக்கிறது.

குறிப்பாக உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டைத் தடுக்கிறது என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset