நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இலக்கவியல் தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த முறையான திட்டவரைவும், கட்டமைப்பும் அவசியம்: கோபிந்த் சிங்

கோலாலம்பூர்:

இலக்கவியல் தொழில்நுட்பத்தின் மீதான  நம்பிக்கை என்பது நவீன இலக்கவியல் உலகுக்கான முக்கிய கூறு என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

46ஆவது ஆசியான் மாநாட்டை மலேசியா ஏற்று நடத்தும் நிலையில், இலக்கவியல் அமைச்சின் கீழ் ஆசியான் 5ஜி, செயல்முறை தொழில்நுட்பம் பாதுகாப்பு மாநாடு 2025 அடுத்த  3 நாட்களுக்கு நடைபெறுகிறது.

ஆசியாவிலேயே முதல் முறையாக நடைபெறும் இந்த செயல்முறை தொழில்நுட்ப மாநாட்டை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இலக்கவியல் தொழில்நுட்பம் மீதான நம்பிக்கை என்பது, நவீன இலக்கவியல் உலகத்தின் அடிப்படை கூறு ஆகும்.

மலேசிய அரசாங்கம், பொருளாதாரம் மற்றும் சமூகத்தை இலக்கவியல் தொழில்நுட்பம் நோக்கி நகர்த்தும் நிலையில், இலக்கவியல் தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையை மேலோங்கச் செய்வது அவசியம்.

புதிய தொழில்நுட்பம் மீது மக்கள் நம்பிக்கை கொள்வது அவசியம். அதற்கு வலுவான நடவடிக்கைகளை எடுப்பது தமது கடமை என அமைச்சர் வலியுறுத்தினார்.

இதற்கு முக்கியத் தூண்களாக விளங்கும் இலக்கவியல் உள்கட்டமைப்பு, திட்ட வரைவு, இலக்கவியல் சார்ந்த விழிப்புணர்வு கல்வி ஆகியவற்றுக்கு விரிவான அணுகுமுறை தேவை.

ஆசியான் வட்டார டிஜிட்டல் சேவைகளில்,  இலக்கவியல் மீதான நம்பிக்கையை மேலோங்கச் செய்யும் அணுகுமுறைகளை வரையறுப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

ஆசியான் 5ஜி செயல்முறை தொழில்நுட்ப பாதுகாப்புக்கான, பகிரப்பட்ட கட்டமைப்புகள், வழிகாட்டுதல்களை நிறுவ தமதமைச்சு நுண்ணோக்குவதாக அமைச்சர் கோபிந்த் தெரிவித்தார்.

மேலும் இலக்கவியலில் புதுமை மற்றும் மேம்பாட்டுத் திறனை வளர்க்கும் பொது, தனியார் கூட்டமைவுகளின்  வழி ஆசியான் நாடுகளுக்கிடையே பாதுகாப்பான இணைய சூழலை உருவாக்கவும், பங்குதாரர்களிடையே அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தாம் முனைப்பு கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இணைய பாதுகாப்பு என்பது இன்றைய நிலையில் முக்கியமான ஒன்று.

இலக்கவியல் அமைச்சின் கீழ் இயங்கும் CyberSecurity Malaysia நிறுவனத்தின் ஆய்வின்படி 2024 இல் 6,000 க்கும் மேற்பட்ட இணைய மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில் முக்கியமாக மோசடி, ஊடுருவல்கள் மற்றும் தீங்கிழைக்கும் குறியீடுகள் அடங்கும்.

கடந்த ஆண்டில் இணைய குற்றங்களால் மலேசியா 1.22 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதி இழப்பை சந்தித்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தாம் இது போன்ற முனைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இது போதாது, ஒட்டு மொத்த மலேசியர்களுக்கும், ஆசியான் வட்டார நாடுகள் உட்பட  இது தொடர்பான விழிப்புணர்வு இருப்பது அவசியம் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset