நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் வீ.தி.சம்பந்தன் நாட்டின் ஒருமைப்பாட்டு முன்னோடியாக திகழ்ந்தவர்: ஒருமைப்பாட்டு அமைச்சர் ஏரன் அகோ டகாங் புகழாரம்

பெட்டாலிங் ஜெயா: 

நாட்டின் சுதந்திரத்திற்காகவும் மக்களின் ஒற்றுமை முன்னோடியாகவும் துன் வீ.தி.சம்பந்தன் திகழ்ந்தார்.

சமூக நல்லிணக்கமிக்க மலேசியர்களை உருவாக்குவதில் ஒருமைப்பாட்டு அமைச்சு பல்வேறு கட்ட நிகழ்ச்சிகளை முன்னெடுத்துள்ளது

அதில் ஒன்றாக, நாட்டின் ஒற்றுமைக்காகவும் தேசியவாதியான துன் சம்பந்தனின் அர்ப்பணிப்புகளைப் போற்றும் விதமாக இந்த நிகழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறது என்று தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஏரன் கூறினார். 

மலேசிய திருநாட்டின் முதல் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக பொறுப்பு வகித்த துன் வீ.தி.சம்பந்தன், தொழிலாளர்களின் நலன், கல்வி உரிமை, இந்தியர்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றில் அதீத அக்கறை கொண்டார்.

தேசிய ஒருமைப்பாட்டினை வலியுறுத்தி பல்வேறான நாட்டின் கொள்கைகளை அவர் வரையறைத்தார்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, தேசிய பழஞசுவடி காப்பகத்தின் தயாரிப்பில் TUN SAMBANTHAN SPEAKS புத்தகமும் இன்று அறிமுகம் கண்டது. தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஏரன் அகோ டகாங அதனை அறிமுகம் செய்தார்.

முன்னதாக, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தோட்ட மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, சம்பந்தனின் புதல்வி திருமதி தேவகுஞ்சரி சம்பந்தனும் கலந்து சிறப்பித்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset