நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தகவல் சுதந்திரச் சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்: குலசேகரன்

புத்ரா ஜெயா:

தகவல் சுதந்திரச் சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் துறையின் சட்ட மற்றும் கழகச் சீர்த்திருத்த துணை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்தார். 

இந்தச் சட்டம் எப்போது தாக்கல் செய்யப்படும் என்பதை எம். குலசேகரன் வெளியிடவில்லை. 

மக்கள் அரசாங்க நடவடிக்கைகள் குறித்து எளிதில் தகவல்களை பெறுவதை உறுதி செய்வதற்காக இந்தச் சட்டம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக எம். குலசேகரன் குறிப்பிட்டார். 

இது அரசாங்கம் மேற்கொள்ளும் சட்ட பரிமாற்ற முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சகம் மேலும் பல்வேறு சட்டபரிமாற்ற முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக 2025ஆம் ஆண்டுக்கான நல்லாட்சி, நேர்மை தொடர்பான மாநாட்டில் உரையாற்றியப்ப் போது எம்.குலசேகரன் இவ்வாறு குறிப்பிட்டார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset