நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பட்டோவின் 30ஆம் ஆண்டு நினைவுநாள்: குலசேகரன் நெகிழ்ச்சி

கோலாலம்பூர்: 
இன்று ஜனநாயக செயல் கட்சியின் (டிஏபி) அடையாளங்களில் ஒருவராக விளங்கிய முன்னாள் மூத்த தலைவர் பி. பட்டோவின் 30ஆம் ஆண்டு நினைவுநாளை  முன்னிட்டு, ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரும் டிஏபி கட்சியின் மூத்த தலைவருமான எம். குலசேகரன் (குலா), அவரது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

சென்னையில் உள்ள ஒரு உயர் தொழில்நுட்ப தொழிற்சாலையை பார்வையிடும் நேரத்தில், அந்த நிறுவனத்தில் ஒருவரின் பேச்சு முறை, திடீரென பட்டோவை நினைவூட்டியதாக குலசேகரன் தெரிவித்தார்.

“அந்த தருணத்தில் தான், இன்று அவருடைய நினைவுநாள் என்பதை உணர்ந்தேன். ஒருவிதமான உணர்ச்சி என்னுள் தோன்றியது. அந்த குரலும் நினைவும் ஒன்றாக ஒன்றிணைந்து, அவர் மீதான மதிப்பையும் வருத்தத்தையும் உருவாக்கின,” என அவர் கூறினார்.

பட்டோ, 1995 ஜூலை 12ஆம் தேதி, பாகான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதே மாரடைப்பால், 48-வது வயதில் காலமானார். அவர், டிஏபி முன்னாள் செயலாளர் லிம் கிட் சியாஙின் நெருக்கமான உறவையும், கட்சியின் முக்கிய மூத்த தலைவராகவும் விளங்கினார்.

“பட்டோவின் உணர்ச்சி மிகுந்த அரசியல் வாழ்க்கை, அவரது தீவிரமான சிந்தனைமுறையும், என்னை பெரிதும் பாதித்தது. அவர் எதையும் திட்டமிடும் மனிதர். அவரை மறக்க முடியாது,” எனக் கூறினார் குலா.

1980-ல் லண்டனில் சட்டம் பயிலும் போது, பட்டோவை சந்தித்த குலசேகரன், பின்னர் 1987-ஆம் ஆண்டு “ஓப்பரேஷன் லாலாங்” சிறைச் சந்திப்புகள் வழியாக அவருடன் நெருக்கமாகிவிட்டார்.

ஒருமுறை, ஆஸ்திரேலியாவிற்குப் பெயர்ந்து செல்லும் எண்ணம் குறித்து தெரிவித்த குலாவை, பட்டோ கடுமையாக எச்சரித்த சம்பவமும் அவரது நினைவில் நிழலாடியது

பட்டோவின் திடீர் மறைவுக்குப் பின்னர், குலா அரசியலில் இறங்கி, 1996-ஆம் ஆண்டு தனது முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

“இன்று அவரது நினைவுநாளில், பெரிய நிகழ்ச்சியை செய்ய முடியாத வருத்தம் இருந்தாலும், சென்னையில் அவர் மீதான நினைவுகளோடு சில நிமிடங்கள் அமைதியாக கழித்தேன். அவர் என் வாழ்க்கையில் ஆழமான தாக்கம் ஏற்படுத்தியவர்,” எனக் கூறினார்.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset