நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செம்பனை தோட்டத்தில் 227 கிலோ எடையிலான பழைய வெடிகுண்டு கண்டுபிடிப்பு

ஜாசின்:

நியாலாஸ், ஃபெல்டா புக்கிட் செங்கேயில் உள்ள தனது செம்பனை தோட்டத்தைச் சுத்தம் செய்யும் பணியின் போது பழைய வெடிகுண்டு என்று நம்பப்படும் ஒரு பொருளை அதன் உரிமையாளர் கண்டுபிடித்தார்.

இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கபட்டது குறித்து பிற்பகல் 1.47 மணிக்கு தமது துறைக்கு  தகவல் கிடைத்தாக ஜாசின் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் முஹம்மத் ருஸ்லி மாட் கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஜாசின் மாவட்டக் காவல்துறை தலைமையகம்,
ஆயுதம், தளவாடம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின்  வெடிகுண்டு செயலிழப்பு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்டச் சோதனையில்  சம்பந்தப்பட்ட அந்த  பொருள் 227 கிலோகிராம் எடை கொண்ட ஒரு பழைய வெடிக்காத வெடிகுண்டு என்பது  கண்டறியப்பட்டது.

வெடிகுண்டு செயலிழப்பு குழு  நிர்ணயிக்கப்பட்ட சீரான செயலாக்க நடைமுறைகளின் (எஸ்.ஓ.பி.) படி அந்த வெடிகுண்டை அழிக்கும் பணிகளை மேற்கொள்ளும் என்று அவர்  ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset