நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்லாமியக் கொள்கைக்கு எதிரான போதனைகளை விளம்பரப்படுத்தவில்லை:  eHati நிறுவனம் விளக்கம்

புத்ரா ஜெயா:

தங்கள் செயல்திட்டங்கள் இஸ்லாமியக் கொள்கைகளிலிருந்து விலகும் போதனைகளை ஊக்குவிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை eHati International Sdn Bhd நிறுவனம் மறுத்துள்ளது. 

தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் வைரலான தவறான மற்றும் உறுதிப்படுத்தப்படாத பதிவுகளை அடிப்படையாக கொண்டவை என்று அந்நிறுவனத்தின் தோற்றுநர்கள் Diyana Tahir, Rahim Shukor ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை 2 Masyitah Ashari என்ற முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட பல பதிவுகள், eHati-க்கு எதிரான பொதுமக்களின் விமர்சனங்களை தூண்டியதாக Diyana Tahir, Rahim Shukor தெரிவித்தனர். 

தங்கள் செயல்திட்டங்கள் குறித்து எந்தவொரு பங்கேற்பாளரிடமிருந்தும் எந்தவொரு புகாரும் இதுவரை வந்ததில்லை என்பதை தோற்றுநர் இருவரும் தெரிவித்தனர்.

eHati நிறுவனம் ஹிப்னோத்தெரபிவ் மூச்சுப் பயிற்சி மற்றும் நியூரோ-லிங்குஸ்டிக் புரோகிராம்மிங் (NLP) போன்ற சுகாதார பயிற்சிகளை முன்னெடுத்தது.

மாந்திரிகம், பிற மத வழிபாட்டு முறைகளின் கூறுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் புகார்களை அந்நிறுவனம் முழுமையாக மறுத்துள்ளது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset