நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பல்கலைக்கழக மாணவியைக் கழுத்தில் கத்தியால் குத்திய முன்னாள் காதலன் கைது

சுபாங் ஜெயா:

சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் தனது 20 வயது முன்னாள் காதலியான பல்கலைக்கழக மாணவியைக் கழுத்தில் கத்தியால் குத்தி காயம் விளைவித்த 21 வயது வெளிநாட்டு ஆடவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக சுபாங் ஜெயா மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் அறிக்கையில் தெரிவித்தார். 

நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக அவர் கூறினார்.

வெளிநாட்டைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தின் இடது பக்கத்தில் வெட்டுக் காயங்கள் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர் மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் (PPUM) அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பாதிக்கப்பட்டவர் தற்போது சீரான நிலையில் உள்ளார் என்று வான் அஸ்லான் கூறினார்.

சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரின் முன்னாள் காதலன் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

மேலும் சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.

ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வேண்டுமென்றே காயப்படுத்தியதற்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 324 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset