நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“அப்பா” என அழைக்கும் அண்டை வீட்டுக் மலாய் சிறுவன் மலேசியர்களின் மனங்களை உருக வைத்தது

கோலாலம்பூர்:
மலாய் சிறுவன், அண்டை வீட்டில் வசிக்கும் இந்திய வாலிபரை “அப்பா” என அன்புடன் அழைத்து, அவரை வீடு திரும்பும் தருணத்தில் மகிழ்ச்சியுடன் ஓடிச் சென்று வரவேற்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்த உணர்வுப்பூர்வமான தருணம், மில்லியன் கணக்கான மலேசியர்களின் இதயங்களை கவர்ந்துள்ளது.

வீடியோவில், அந்த இந்திய ஆணும், சிறுவனும் ஒருவருக்கொருவர் அன்போடு தழுவிக்கொள்கிற காட்சியும், சிறுவனைத் தம்மைத் தூக்கிக் கொண்டு சேர்த்து வருவதும் காணப்படுகிறது. இந்த அழகிய தருணம், சிறுவனின் “அம்மா” “அப்பா வேலைக்குப் போயிட்டாராம்” எனச் சொல்வதிலிருந்து தொடங்குகிறது.

பின்னர் அந்த சிறுவன் அம்மாவைத் தேடி ஓடுகிறான். ஆனால், பாதியிலேயே நிறுத்திக்கொண்டு திரும்பி வந்து தனது அப்பாவிடம் நெருங்கிக் கொண்டான் – இது அனைவர் முகத்தில் புன்னகையைக் கொண்டுவந்தது.

“இப்போது ‘அப்பா’தான் அடமிற்கு (சிறுவன்) பிடித்தவர்,” என்று அந்த வீடியோவில் எழுதப்பட்டிருந்தது.

ஒருவர் கருத்தில், “இது உண்மையிலேயே நெஞ்சை நெகிழச் செய்த தருணம். இருவருக்கும் இரத்த உறவல்ல – ஆனாலும் அன்பு எல்லையற்றது. இங்கு இனத்தன்மை, மதம் எதுவும் முக்கியமில்லை. பாசமும் உணர்ச்சியும் மட்டுமே இருக்கிறது,” எனப் பகிர்ந்திருந்தார்.

இந்த வீடியோ, மலேசியர்கள் வாழும் பன்முக சமூகத்தில் உள்ள மனிதநேயத் தொடுப்பை மீண்டும் நினைவூட்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset