நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் இன்று தொடங்கி தற்காலிக நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது

ஜொகூர் பாரு:

தெப்ராவ் உட்பட ஜொகூர் பாருவைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் 30,000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் இன்று முதல் 26 மணி நேரம் நீடிக்கும் தற்காலிக நீர் விநியோகத் தடையை எதிர்நோக்கவுள்ளனர்.

பாசிர் கூடாங்கில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்தத் தற்காலிக நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது. 

மருத்துவமனைகள், டயாலிசிஸ் மையங்கள் மற்றும் தடையற்ற நீர் விநியோகம் தேவைப்படும் பிற நிறுவனங்கள் போன்ற முக்கியமான வளாகங்களில் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தண்ணீர் டேங்கர்கள் நிறுத்தப்படும் என்று ரன்ஹில் எஸ்ஏஜே ஸ்ட்ரேஷன் பெர்ஹாட் தலைமை நிர்வாக அதிகாரி அனுவார் அப்துல் கானி தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset