
செய்திகள் மலேசியா
ரஃபிசி விலகி இருப்பது, பிகேஆர் கட்சிக்கு இழப்பு : அல்துல் கரீம்
கூச்சிங்
பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபீசி ரம்லி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரின் மகள் நூருல் இஸாஹுடன் இணைந்து செயல்பட்டிருக்கும்போது, பிகேஆர் இன்னும் வலிமையான கட்சியாக இருந்திருக்கும் என சரவாக் மாநில அமைச்சர் அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா தெரிவித்துள்ளார்.
“ரஃபீசி ஒரு சிறந்த அரசியல் திட்டமிடுபவர். அவரைப் போல திறமைசாலியை இழப்பது கட்சிக்கு ஒரு இழப்பாகும். அவர் அன்வாருடனும் நூருலுடனும் இணைந்து இருந்தால், இன்று பிகேஆர் அதிக உறுதியாக இருந்திருக்கும்,” என அவர் FMT இடம் கூறியுள்ளார்.
அண்மையில் நடந்த பிகேஆர் உயர்மட்ட தேர்தலில் ரஃபீசி, துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டபோது, நூருல் இஸாஹிடம் தோல்வியடைந்தார். அதனைத் தொடர்ந்து, ரஃபீசியும் நிக் நஸ்மியும் அமைச்சரவைப் பதவிகளை துறந்தனர்.
அண்மையில், ரஃபீசி மற்றும் 8 பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதித்துறையின் உயர்நிலை நியமனங்களில் அரசியல் தலையீடுகள் உள்ளதாகக் கூறி, சுதந்திர விசாரணைக் குழு (RCI) ஒன்றை அமைக்கக் கோரிக்கை வைத்தனர்.
மக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கில், அவர் ஒரு பயணத்தை தொடங்கியுள்ளார். ஜூலை 13 முதல், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் தொடங்கி, நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் “ரஃபீசி Invoke Malaysia-வை உருவாக்கி, 2018ஆம் ஆண்டு பாரிசான் நேஷனல் அரசை வீழ்த்த முக்கிய பங்காற்றினார். அவரை இழப்பது பிகேஆருக்குப் பாதகமாக இருக்கலாம்,” என கரீம் கருத்துரைத்தார்.
அமைச்சராக இருந்தபோது அரசை விமர்சிக்காத ரஃபீசி, பதவியில் இருந்து விலகிய பின் மீண்டும் கடுமையான விமர்சனங்களை வெளியிடத் தொடங்கியுள்ளது குறித்து. “இப்போது அவர் பழைய ரஃபீசி போலவே தெரிகிறார்,” என கரீம் சுட்டிக்காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 3:04 pm
மலேசிய ஊடக மன்றத்தின் முதல் உறுப்பினர்களாக 12 பேர் நியமனம்
July 15, 2025, 12:18 pm
தகவல் சுதந்திரச் சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்: குலசேகரன்
July 15, 2025, 11:58 am
பட்டோவின் 30ஆம் ஆண்டு நினைவுநாள்: குலசேகரன் நெகிழ்ச்சி
July 15, 2025, 11:51 am
செம்பனை தோட்டத்தில் 227 கிலோ எடையிலான பழைய வெடிகுண்டு கண்டுபிடிப்பு
July 15, 2025, 11:47 am
புருனை சுல்தான் பிறந்தநாள்: பிரதமர் அன்வார் வாழ்த்து
July 15, 2025, 11:37 am
விரைவில் மக்களுக்கு நற்செய்தி காத்திருக்கிறது: பிரதமர் அன்வார்
July 15, 2025, 11:04 am
இஸ்லாமியக் கொள்கைக்கு எதிரான போதனைகளை விளம்பரப்படுத்தவில்லை: eHati நிறுவனம் விளக்கம்
July 15, 2025, 10:32 am