நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

16வது பொதுத்தேர்லில் தேசியக் கூட்டணி இயக்குனராக ஹம்சா செயல்பட முடியும்: பாஸ் துணைத்தலைவர் கருத்து

பெட்டாலிங் ஜெயா: 

தேசிய கூட்டணியின் (PN) 16வது பொதுத்தேர்தலுக்கான (GE16) உருவாக்க எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஸைனுடின்,  முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்று பாஸ் துணைத்தலைவர் அமர் அப்துல்லா தெரிவித்தார்.

பெர்சாத்து கட்சியின் துணைத்தலைவரும், தேசிய கூட்டணியின் துணைத்தலைவருமாக இருப்பது அவருக்கு இந்த பொறுப்பை ஏற்கும் தகுதியை வழங்குகிறது என FMT-இடம்மவர் கூறியுள்ளார்ர்.

“திட்டமிடல் என்பது ஒருவரின் வேலை அல்ல. இது குழுவாக நடத்தப்படும் ஒன்று. இதில், பெர்சாத்துவின் தலைவர் மாற்றப்பட வேண்டுமா என்பது ஒரு சிக்கலாக இருக்காது” என்றார் அமர்.

எப்படியிருந்தாலும், ஹம்சாவை தலைவராக மாற்றுவது குறித்து பெர்சாத்துவில் நிலவும்  உட்கட்சி விவகாரங்களில் பாஸ் தலையிட விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக முஹைதீன் அல்லது ஹம்சாவை இருவரில் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதில் பாஸ் இன்னும் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துக்கொள்ளவில்லை என முன்னதாக, மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பகுப்பாய்வாளர் மஸ்லான் அலி கூறியிருந்தார்

அதே நேரத்தில், தேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அகமத் ஃபௌஸி அப்துல் ஹமீத், பாஸ் ஹம்சாவை ஆதரிக்கும் நிலையில் இருப்பதாக கூறினார். ஆனால், முஹைதீன் மற்றும் அவரது ஆதரவாளர்களை பாதிக்காத வகையில் பாஸ் நடந்துகொள்கிறதாகவும் தெரிவித்தார்.

“பெர்சாத்துவில் என்ன நடந்தாலும் அதனால், தேசிய கூட்டணியில் பாஸ் மற்றும் பெர்சாத்துவுக்கிடையிலான உறவுகள் பாதிக்கப்படாது. எங்கள் கூட்டணி என்பது கட்சி-மட்டப்பட்ட உறவுகளுக்கு அடிப்படையாக உள்ளது. யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ, அவரை நாங்கள் மதிப்போம்,” என்று அமர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset