நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவகங்கள், முடிதிருத்தும் கடைகளில் அதிரடி சோதனை: 24 சட்டவிரோத தொழிலாளர்கள் கைது

கோலாலம்பூர்:

உணவகங்கள், முடிதிருத்தும் கடைகளில் நடத்தப்பட்ட  அதிரடி சோதனையில் 24 சட்டவிரோத தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிலாங்கூர் மாநில குடிநுழைத் துறை ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்துள்ளது.

கிள்ளான், ஷாஆலமைச் சுற்றியுள்ள மூன்று தனித்தனி இடங்களில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

இந்த சோதனையில்  24 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.

Ops Dandan, Ops Selera மூலம் சோதனை செய்யப்பட்ட 54 வெளிநாட்டினரில் அவர்கள் ஒரு பகுதியாக இருந்தனர். இது முடிதிருத்தும் கடைகள், உணவகங்களை ஆய்வு செய்வதை இலக்காகக் கொண்டது.

சோதனை செய்யப்பட்ட மூன்று வளாகங்களிலும் முறையே கிள்ளானில் உள்ள பண்டார் புக்கிட் ராஜாவில் உள்ள ஒரு முடிதிருத்தும் கடை, அதே போல் தாமான் சௌஜானாவில் உள்ள இரண்டு உணவகங்கள்,  ஷா ஆலமில் உள்ள பிரிவு 7 ஆகியவை அடங்கும்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் இந்தியா, மியான்மர், இலங்கையை சேர்ந்தவர்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset