
செய்திகள் மலேசியா
நீதித்துறை சார்ந்த குற்றச்சாட்டுகள்: விசாரணை நடத்த கோரிக்கை
பெட்டாலிங் ஜெயா:
நீதித்துறையில் அதிகாரபூர்வ பதவிகள் நியமிக்கப்படும் நீதித்துறை நியமனக் குழுவின் (JAC) கூட்ட ஆவணங்கள் கசிந்ததாகக் கூறப்படுவதை வெளிப்படையாக விசாரிக்க வேண்டுமென அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள்
அதிகார மீறல் மற்றும் நீதித்துறையில் தலையீடு நடந்ததா என்ற கோணத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பெர்சத்து தலைவர் முஹைதீன் யாசின் மற்றும் முன்னாள் சட்டத்துறை துணை அமைச்சர் ராம் கார்பால் சிங் ஆகியோர் முன்வைத்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகள் உண்மையெனில், ஒருவர் தனது வழக்குகளுக்கு உரிய நீதிமன்ற விசாரணையைப் பெறும் உரிமையை கெடுக்கும் வாய்ப்பு உண்டு என முஹைதீன் கூறியுள்ளார்.
எனவே, "இதன் தொடர்பில் முழுமையான விசாரணை நடைபெற வேண்டும். நீதித்துறையின் நம்பிக்கையை பாதுகாக்க, நீதிமன்ற நியமனங்கள் நேர்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.” என அவர் வலியுறுத்தினார்.
JAC கூட்டத்தின் தொடர்புடைய ஒரு ஆவணம், கடந்த வார இறுதியில் சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த ஆவணத்திலுள்ள தகவல்களில், முன்னாள் தலைமை நீதிபதி ஒருவர், ஒரு நீதிபதி பற்றிய நேர்மைக் குறைகளை எச்சரிக்கை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நீதிபதி, ஒரு வழக்கில் ஒரு தரப்புக்கு ஆதரவாக முடிவு வர செய்ய முயற்சித்ததாகவும், தமக்கு எதிராக கருத்து கொண்ட மற்றொரு நீதிபதியை இடமாற்றம் செய்ய விரும்பியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
“இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், JAC சட்டத்தின் பிரிவு 23(2)(a) உடன் முரணாகும் — இது நீதித்துறையின் நேர்மையை சார்ந்தது" என முஹைடின் கூறினார்.
“நேர்மையற்ற விவகாரங்கள் தொடர்பாக தீர்வுகள் இல்லாத நிலையில், அந்த நீதிபதி உயர்நிலைப் பதவிக்கு நியமிக்கப்படுவது மக்கள் நம்பிக்கையை பாதிக்கும்.”
தற்போது போலீசார், அந்த கூட்ட ஆவணங்கள் எவ்வாறு வெளியானது என்பதை தகவல் பராமரிப்பு சட்டம் மற்றும் இன்னும் இரண்டு சட்டங்களின் கீழ் விசாரணை செய்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
July 17, 2025, 5:21 pm
2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இளைஞர் வயது வரம்பு 30 ஆகக் குறைப்பு: ஹன்னா இயோ
July 17, 2025, 4:48 pm
பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்த இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
July 17, 2025, 4:36 pm
மலேசிய திறன் சான்றிதழ் வாயிலாக திவேட் பயிற்சிக்கான புரட்சி தொடரும்: ஸ்டீவன் சிம்
July 17, 2025, 4:35 pm
அனைவரும் கோலாலம்பூர் நகரத்தின் தூய்மையைப் பராமரிக்க வேண்டும்: ஜலிஹா முஸ்தாஃபா
July 17, 2025, 4:01 pm
கிளந்தானில் ஓரின சேர்க்கை (Gay) விருந்து: மாநில மரியாதையை களங்கப்படுத்திய செயல்: அம்னோ
July 17, 2025, 3:52 pm