நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சமய போதகர் தொடர்புடைய அந்தரங்க வீடியோ வழக்கு – இந்த வாரம் துணை அரசு வழக்கறிஞரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்

கோலாலம்பூர்
 தனது மனைவிகள் மற்றும் பிற பெண்கள் அடங்கிய நெருக்கமான அந்தரங்க வீடியோக்களை பகிர்ந்ததாகக் கூறப்படும் சமய போதகருக்கெதிரான வழக்கு விசாரணை முடிந்து, இந்த வாரம் துணை அரசு வழக்கறிஞர்  (DPP) அலுவலகத்திற்கு அனுப்பப்பட இருக்கிறது.

ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர், உதவி ஆணையர் முகமட் இக்பால் இப்ராஹிம், இவ்விவரத்தை இன்று உறுதிப்படுத்தினார்.

“விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது. முடிந்தவுடன் வழக்குச் சுருக்கம் அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்,” 

இந்த வழக்கில் இதுவரை ஐந்து பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சந்தேகநபர், ஜூலை 5 அன்று, அவரது இரண்டாவது மனைவியின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். அந்த மனைவி, தன்னையும் மற்ற மனைவிகளையும் உள்ளடக்கிய அந்தரங்க வீடியோக்களை அவர் பகிர்ந்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஜூன் 16 அன்று, புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் அந்த நபரை கைது செய்து, இரண்டு கைப்பேசிகள் மற்றும் ஒரு மடிக்கணினியை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், ஜூலை 6 அன்று, சிலாங்கூர் இஸ்லாமிய மத விவகார பிரிவு (MAIS) தலைவர் டத்தோ சாலெஹுடின் சைதீன் கூறுகையில், 2022ஆம் ஆண்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்திற்கிடமானதால், அந்த சமய போதகரின் போதனை உரிமம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், செப்டம்பர் 2024-இல், செல்லுத்திய மத அனுமதிப் பத்திரம் இல்லாமலே போதனை செய்ததற்காக, சிலாங்கூர் இஸ்லாமிய மதத் துறை (JAIS) அவரை கைது செய்திருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset