நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மோட்டார் சைக்கிளை இடித்துவிட்டு தப்பியோடிய கார்:  போலீஸ் விசாரணை தொடங்கியது

கிள்ளான்,
ஜாலான் கப்பார் சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு நடந்த கார் மற்றும் மோட்டார்சைக்கிள் இடையிலான விபத்தில், கார் ஓட்டுநர் மோட்டார் சைக்கிளை  மோதிவிட்டு தப்பிச் சென்றதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

“விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிறிய அளவிலான காயங்களுடன் உயிர்தப்பினார். ஆனால் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றார்,” என கிள்ளாங் உத்தரா மாவட்ட காவல்துறை தலைவர் எஸ். விஜயா ராவ் கூறினார்.

இந்த விபத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, பொதுமக்களிடம் கடும் வருத்தத்தையும் ஆதங்கத்தையும் உண்டாக்கியுள்ளது. பலரும் மோட்டார்சைக்கிள் ஓட்டுநரை மோதியதும் தப்பியோடிய கார் ஓட்டுநரைக் கடுமையாக கண்டித்துள்ளனர்.

இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டத்தின் பிரிவு 42(1) – ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக விசாரணை செய்யப்படுகிறது. இந்த பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனையோடு, RM15,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தைக் குறித்து தகவல்கள் உள்ளவர்கள், போலீஸ் செர்ஜன்ட் கைருல் ஹிஷாமை 019-6816734 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள எந்தவொரு காவல் நிலையத்திலும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset