நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமரின் பதவியை சவால் செய்யும் முயற்சிகள் பயனற்றவை: கமில்

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஶ்ரீ  அன்வார் இப்ராஹிமின் பதவியை சவால் செய்யும் எந்தவொரு முயற்சியும் பயனற்றது.

அவருக்கு எதிரான பேரணிகளும் இதில் அடங்கும் என்று கெஅடிலான் இளைஞர் பிரிவுத் தலைவர் கமில் முனிம் இதனை கூறினார்.

மடானி அரசாங்கத்தில் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பின பிரதமருக்கு ஆதரவாக உள்ளனர்.

இதனால் அவரின் பிரதமர் பதவியும் வலுவாக தான் உள்ளது.

இதனால்  பேரணியின் மூலம் பிரதமரின் நிலையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சி தற்போதைய அரசியல் நிலைத்தன்மைக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

மேலும் இது போன்ற நடவடிக்கைகள் தெளிவான திசையையும் கொண்டிருக்கவில்லை. இது கலங்கிய நீரில் தத்தளிப்பது போன்றதாகும்.

மேலும் எந்த தீர்வுகளையும் வழங்காமல் மக்களிடையே பதட்டத்தையும் அமைதியின்மையையும் மட்டுமே உருவாக்குகிறது என்று அவர் கூறினார்.

நிதியமைச்சரின் அரசியல் செயலாளரான கமில், மக்கள் தங்கள் மதிப்பீடுகளில் புத்திசாலிகளாகி வருகிறார்கள்.

ஆகையால் எதிர்க்கட்சித் தலைவர்களால் நடத்தப்படும் பேரணியால் எளிதில் பாதிக்கப்படுவதில்லை என்றும் தனது கட்சி நம்பிக்கை கொண்டுள்ளதாகக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset