
செய்திகள் மலேசியா
மலாக்கா பத்து பெரண்டாம் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானத்தின் மகா கும்பாபிஷேகம்: விமரிசையாக நடைபெற்றது
மலாக்கா:
மலாக்கா பத்து பெரண்டாமில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானத்தின் மகா கும்பாபிஷேகம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
கடந்த காலங்களில் ரயில் தண்டவாளத்தை அமைக்க வந்த தொழிலாளர்களால் சிறு குடிசையாக இந்த முருகன் ஆலயம் அமைக்கப்பட்டது.
தற்போது இவ்வாலயம் 120 ஆண்டுகளை கடந்து விட்டது.
இந்நிலையில் திருப்பணிகளுக்கு பிறகு ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. தேவஸ்தானத்தின் தலைவர் மனோ தலைமையில் இந்த கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்த குடமுழக்கு நன்னீராட்டு விழாவில் 3,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து முருகனின் அருளாசி பெற்று சென்றனர்.
காலை 11 மணிக்கு மேல் வருகுது இந்த அனைத்து பக்தர்களும் கந்த சஷ்டி கவசத்தை பாடி அதன் பிறகு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை முடிந்து மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து இன்று இரவு சிறப்பு பூஜையும் ரத ஊர்வலமும் நடைபெற்றது.
அதை எடுத்து 48 நாட்களுக்கு தொடர்ச்சியாக மண்டல அபிஷேகம் நடைபெறும் என்பதால் பக்தர்கள் இப்பூஜைகளில் கலந்து கொள்ளுமாறு ஆலயத் தலைவர் மனோ கேட்டுக் கொண்டார்.
முன்னதாக இவ்விழாவில் லோட்டஸ் குழுமத்தின் தலைவர் டான்ஶ்ரீ ரெனா துரைசிங்கம், மஇகா முன்னாள் தலைவர் டான்ஶ்ரீ டாக்டர் சுப்பிரமணியம், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஷாண், டத்தோஶ்ரீ ஹரி, டாக்டர் சுவாமி சண்முகநாதன், வானொலி புகழ் கவிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 17, 2025, 5:21 pm
2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இளைஞர் வயது வரம்பு 30 ஆகக் குறைப்பு: ஹன்னா இயோ
July 17, 2025, 4:48 pm
பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்த இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
July 17, 2025, 4:36 pm
மலேசிய திறன் சான்றிதழ் வாயிலாக திவேட் பயிற்சிக்கான புரட்சி தொடரும்: ஸ்டீவன் சிம்
July 17, 2025, 4:35 pm
அனைவரும் கோலாலம்பூர் நகரத்தின் தூய்மையைப் பராமரிக்க வேண்டும்: ஜலிஹா முஸ்தாஃபா
July 17, 2025, 4:01 pm
கிளந்தானில் ஓரின சேர்க்கை (Gay) விருந்து: மாநில மரியாதையை களங்கப்படுத்திய செயல்: அம்னோ
July 17, 2025, 3:52 pm