நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரிட்டனை சேர்ந்த சிறுவன் டேவிட் பாலிசாங் காணாமல் போன வழக்கு :  ஐவரின் வாக்குமூலம் பதிவு

கோலாலம்பூர்: 
மலேசியாவில் காணாமல் போனதாக நம்பப்படும் பிரிட்டனைச் சேர்ந்த சிறுவன் டேவிட் பாலிசாங், தொடர்பாக, ஐந்து நபர்களிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்துள்ளார்.

“இந்த வழக்கு இன்னும் தீவிர விசாரணை நிலையில் உள்ளது. இதுவரை, இது தொடர்பாக ஐந்து நபர்களிடம் நாங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளோம்,” என அவர் இன்று தெரிவித்தார்.

17 வயதான டேவிட் பாலிசாங், இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள சீடில் என்ற இடத்தைச் சேர்ந்தவர். ஜூன் 6 அன்று, பெற்றோரிடம் எதுவும் தெரிவிக்காமல் மலேசியாவின் கோலாலம்பூருக்கு விமானம் மூலம் வந்ததாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

தனது இளைய சகோதரரிடம் “A-Level தேர்வுக்காக பள்ளிக்கு விரைவில் கிளம்புகிறேன்” என்று கூறியதுதான், அவர் குடும்பத்தினர் கடைசியாக பெற்ற தகவல். அதன் பிறகு அவரது தொலைபேசிகள் மற்றும் சமூக ஊடகக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

சம்பவம் நடந்த அன்று மாலை, டேவிட் பாலிசாங் ஜூன் 7 ஆம் தேதி காலை 8.29 மணிக்கு KLIA1-இல் துபாய் வழியாக வந்ததாக யுகே அதிகாரிகள் உறுதி செய்தனர்.

அதன்பிறகு, KLIA விலிருந்து KL Sentral-க்கு பஸ்ஸில் சென்றதாக நம்பப்படுகிறது.

இந்த சம்பவம் மலேசியாவிலும் பிரிட்டனிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. டேவிட் பாலிசாஙின் இருப்பிடத்தை கண்டறிய, மலேசிய அதிகாரிகள், சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

அவர் ஏன் மலேசியா வந்தார் என்பது தெளிவாகவில்லை. இதனிடையே அனைத்து கோணங்களிலும் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக மலேசிய காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset