நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெஸ்தாரி ஜெயா ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்; அடுத்தாண்டு விமரிசையாக நடைபெறும்: பழனியப்பன்

பெஸ்தாரி ஜெயா:

பெஸ்தாரி ஜெயா ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா அடுத்தாண்டு மிகவும் விமரிசையாக நடைபெறவுள்ளது.

ஆலயத்தின் தலைவர் பழனியப்பன் சின்னப்பன் இதனை நம்பிக்கையுடன் கூறினார்.

பெஸ்தாரி ஜெயா வட்டாரத்தில் மிகப் பெரிய ஆலயமாக ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலயம் விளங்கி வருகிறது.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை இவ்வாலயம் கொண்டுள்ளது. இவ்வாலயத்தில் தற்போது திருப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு நாளும் அதிகமான பக்தர்கள் இவ்வாலயத்திற்கு வருவதால் ஆலயம் தற்போது விரிவாக்கம் செய்யப்படுகிறது.

அதே வேளையில் சிவப் பெருமான் சன்னதி, பெருமாள் சன்னதியும் புதியதாக கட்டப்படுகிறது. பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இப்புதிய சன்னதிகள் கட்டப்பட்டு வருகிறது.

ஆலயத் திருப்பணிகள் விரைவாக நடைபெற்று முடிந்தால் அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள்  மகா கும்பாப்பிஷேகத்தை நடத்தை ஆலய நிர்வாகம் இலக்கு கொண்டுள்ளது.

இவ்வேளையில் ஆலய திருப்பணிக்கு உதவிய நல்லுள்ளங்களுக்கு எனது நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

அதே வேளையில் திருப்பணி முழுமையாக நிறைவு பெறுவதற்கும் மகா கும்பாபிஷேக விழாவிற்கும் பொதுமக்கள் நல்லுள்ளங்களின் ஆதரவு தேவைப்படுகிறது என்று பழனியப்பன் கேட்டு கொண்டார்.

முன்னதாக இவ்வாலயத்தின் திருப்பணிகளை மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset