நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்க செயற்கை நுண்ணறிவு சிப்களை ஏற்றுமதி செய்வதற்கு திட்டமிட்ட வர்த்தக அனுமதி கட்டாயம்

கோலாலம்பூர்:

அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு சிப்களை ஏற்றுமதி, நாட்டின் வழியாக மற்றொரு நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கைகளுக்குத்  திட்டமிட்ட வர்த்தக அனுமதி கட்டாயம் தேவை என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
 
இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவ்வமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்தது.

இந்தக் கட்டாய அனுமதி திட்டமிடல் வர்த்தகச் சட்டம் 2010-இன் பிரிவு 12-இன் கீழ் அமலுக்கு வருகிறது.

பட்டியலில் இல்லாத முக்கிய பொருட்களையும் கட்டுப்படுத்தவும் இந்தச் சட்டப் பிரிவு வழிவகுக்கிறது.

ஏற்றுமதி நடவடிக்கைக்கு 30 நாள்களுக்கு முன்னதாக நிறுவனங்கள் திட்டமிட்ட வர்த்தக அனுமதி கோரி அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.

இந்தச் சட்டத்தை மீறினால் சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று  முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset