நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மருத்துவமனைகளில் பணியாளர் நெருக்கடி தீவிரம்: மாநில அரசு கவலை

ஜொகூர் பாரு, 
ஜொகூர் மாநிலத்திலுள்ள பல முக்கிய மருத்துவமனைகளில், மருத்துவ நிபுணர்கள் மற்றும் தாதியர் உள்ளிட்ட பணியாளர்கள் பற்றாக்குறை கடுமையான நிலையை ஏற்படுத்தியுள்ளதாக, மாநில முதல்வர் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி தெரிவித்தார்.

சுகாதார செயற்குழு தலைவர் லிங் தியான் சூன் உடன் இணைந்து சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் மேற்கொண்ட கள ஆய்வில், சில வார்டுகளில் ஒரு தாதியருக்கு 10 முதல் 14 நோயாளிகள் வரை கவனிக்க வேண்டிய நிலை காணப்பட்டது.

இது, ஒரு தாதியருக்கு அதிகபட்சம் 6–8 நோயாளிகள் என்ற சுகாதார தர அளவுக்கு எதிராக இருப்பதாகவும் அவர் சுட்டினார்

“இந்த நிலை, மருத்துவ பணியாளர்களின் மன உறுதியையும், சிகிச்சை தரத்தையும் பாதிக்கிறது,” எனும் அவர், ஜொகூர் அரசு இதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும், உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

காலியான பணியிடங்களை சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று அவற்றை விரைவில் நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset