நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவின் 6 மாநிலங்களுக்கு ஸ்கூட்டரில் பயணம் செய்த தைவானிய ஆசிரியர் 

ஷா ஆலம்: 

வழிகாட்டியுடன் சுற்றிப் பார்க்கும் வழக்கத்தை தவிர்த்து விட்டு தைவானிய ஆசிரியர் தனது ஸ்கூட்டரில் மலேசியாவின் ஆறு மாநிலங்களுக்குத் தனியாகப் பயணம் செய்துள்ள அனுபவத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். 

ஷா ஆலமிலுள்ள சீனப்பள்ளி ஆசிரியரான, சாங் 125 சிசி வேகம் கொண்ட தனது ஸ்கூட்டரில் தனியாக சென்று தீபகற்ப மலேசியாவின் அழகை ரசிக்க முடிவு செய்து தனது பயணத்தை ஷா ஆலமிலிருந்து தொடங்கினார். 

ஷா ஆலமிலிருந்து கெடா, அதன் பின் பெர்லிஸ், அதை தொடர்ந்து கிளந்தான், பகாங், ஜொகூர் ஆகிய மாநிலகளுக்கு சாங் பயணம் மேற்கொண்டார். 

சாங் 7 நாள்கள் 6 இரவுகள் 2,640 கிலோமீட்டர் சாலை பயணத்தை மேற்கொண்டு ஆறு மாநிலங்களுக்குச் சென்றுள்ளார், 

125 சிசி வேகம் கொண்ட தனது ஸ்கூட்டரை மற்ற மோட்டார் சைக்கிள்கள் போல வேகமாகச் செலுத்த இயலாவிட்டாலும் தன்னை சுற்றியுள்ள இயற்கையை ரசித்தவாறு மெதுவாகப் பயணம் செய்த அனுபவம் தனக்கு மனநிறைவு கொடுத்ததாகவும் ஆசிரியர் சாங் தெரிவித்துள்ளார். 

ஓர் இடத்திற்கு விரைவாக செல்வது தனக்கு நோக்கமல்ல என்றும் இயற்கையோடு சுற்றுச்சூழலை ரசித்தவாரே நிதானமாக பயணிப்பதே தனது விருப்பம் என்றும் அவர் தனது பதிவில் பதிவிட்டுள்ளார். 

மொழித் தடை இருந்த போதிலும் தனக்கு உதவிய உள்ளூர்வாசிகளுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset