
செய்திகள் மலேசியா
மலேசிய இந்தியர்களுக்கான மித்ரா நிதி முறையாக சென்றடையவில்லை: பதில் இல்லையென்றால் நாடாளுமன்றம் முன்பு பேரணி நடத்தப்படும்
கோலாலம்பூர்:
மலேசிய இந்தியர்களுக்கான மித்ரா முறையாக செயல்படவில்லை என்றும் மித்ரா மூலமாக உள்ள திட்டங்களுக்கான நிதியும் வெளிப்படை தன்மையாக வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
மித்ரா நிதி தொடர்பாக தற்போது நாடாளுமன்றத்தில் இருக்கும் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாய் திறப்பார்களா என்று சமூகவாதியும் புரட்சி இயக்கத்தின் தலைவருமான உமா காந்தன் கேள்வி எழுப்பினார்.
மித்ராவில் வெளிப்படை தன்மை இல்லை. இதன் காரணமாக இந்தியர்களுக்கு வர வேண்டிய நிதியும் முறையாக வந்து சேரவில்லை.
நடப்பு தலைவர் பி.பிரபாகரன் இதற்கு முறையான விளக்கம் அளிக்க வேண்டும். இந்நிலையில் எஞ்சிய நிதிக்கும் அங்கீகாரம் இல்லாவிடில் நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் என்று உமா காந்தன் எச்சரிக்கை விடுத்தார்.
எதிர்கட்சியாக இருந்த பக்காத்தான் அரசாங்கம் அப்போதைய அரசாங்கத்தைக் கடுமையாக எதிர்த்தது. தற்போது அரசாங்கமாக இருக்கும் பக்காத்தான் அரசாங்கம் அரசாங்கமாக செயல்படாமல் இன்னும் எதிர்கட்சி என்ற தோரணையில் உள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
RMK 13 திட்டம் தொடர்பாக மலேசிய இந்தியர்களின் நிலை என்ன என்பதும் இதுவரை தெரியவில்லை. இதனால் அரசாங்கம் ஒதுக்கும் மித்ரா நிதியும் திருமபி அனுப்படும் நிலை உள்ளது.
இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்வதாக மித்ரா நிதி எங்கே என்ற கூட்டத்தில் உமா காந்தனும், MIPP கட்சியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 17, 2025, 5:21 pm
2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இளைஞர் வயது வரம்பு 30 ஆகக் குறைப்பு: ஹன்னா இயோ
July 17, 2025, 4:48 pm
பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்த இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
July 17, 2025, 4:36 pm
மலேசிய திறன் சான்றிதழ் வாயிலாக திவேட் பயிற்சிக்கான புரட்சி தொடரும்: ஸ்டீவன் சிம்
July 17, 2025, 4:35 pm
அனைவரும் கோலாலம்பூர் நகரத்தின் தூய்மையைப் பராமரிக்க வேண்டும்: ஜலிஹா முஸ்தாஃபா
July 17, 2025, 4:01 pm
கிளந்தானில் ஓரின சேர்க்கை (Gay) விருந்து: மாநில மரியாதையை களங்கப்படுத்திய செயல்: அம்னோ
July 17, 2025, 3:52 pm