நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிக் ஆடம்ஸ் தூதராக நியமிக்கப்பட்டதை நிராகரிக்க மலேசியாவுக்கு அதிகாரம் உள்ளது: கைரி

கோலாலம்பூர்:

மலேசியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக நிக் ஆடம்ஸை நிராகரிக்க மலேசியாவுக்கு முழு அதிகாரம் உள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் இதனை கூறினார்.

ஒரு நாடு அந்த நாட்டிற்கு நியமிக்கப்பட்ட தூதரை நிராகரிக்க வியன்னா மாநாட்டின் 4ஆவது பிரிவு அனுமதிக்கிறது.

இப்போது அது விஸ்மா புத்ராவின் பொறுப்பில் உள்ளது.

மற்றொரு நாடு தனது தூதர் வேட்பாளரை அனுப்புவதற்கு முன்பு, பெறும் நாட்டிலிருந்து முறையான ஒப்புதல் தேவை என்று வியன்னா மாநாட்டின் 4ஆவது பிரிவு கூறுகிறது.

வேட்பாளருடன் உடன்படவில்லை என்றால், பெறும் நாடு காரணத்தைக் கூற வேண்டியதில்லை என்று கைரி கூறினார்.

ஜூலை 11ஆம் தேதி  அமெரிக்க அதிபர்  டொனால்ட் டிரம்ப், ஆஸ்திரேலிய, அமெரிக்கவில்  செல்வாக்கமிக்க எழுத்தாளர், ஆல்பா மாலே என்று தன்னைத்தானே விவரித்துக் கொண்ட ஆடம்ஸை மலேசியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக நியமித்தார்.

இவர் ஒரு சர்ச்சைக்குரிய நபராக உள்ளார். இஸ்லாமிய வெறுப்பு அறிக்கைகளை வெளியிடுவதற்காகவும் ஆடம்ஸ் அறியப்படுகிறார். அவர் சியோனிசத்தின் ஆதரவாளரும் ஆவார்.

சுதந்திர பாலஸ்தீனம் சின்னம்ம் அணிந்திருந்த ஒரு உணவக பணியாளரை வெற்றிகரமாக பணிநீக்கம் செய்ததைப் பற்றி பெருமையாகப் பேசும் ஆடம்ஸின் பழைய பதிவையும் கைரி பகிர்ந்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset