
செய்திகள் மலேசியா
குறைந்த வேலைவாய்ப்பு வாய்ப்பு கொண்ட பாட திட்டங்களை மீளாய்வு செய்ய உத்தரவு: துணை உயர்கல்வி அமைச்சர் அறிவிப்பு
புத்ராஜெயா, ஜூலை 14:
அரசு பல்கலைக்கழகங்களில் வணிகரீதியாக வேலைவாய்ப்பு வாய்ப்புகள் (Graduate Employability – GE) 30%க்கும் கீழ் உள்ள பாட திட்டங்களை மீளாய்வு செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வி துணையமைச்சர் டத்தோ முஸ்தபா சாக்மூட் தெரிவித்தார்.
“மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க, வேலைவாய்ப்பு வாய்ப்பு அதிகமுள்ள துறைகளையே வழங்க பல்கலைக்கழகங்கள் உறுதி செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.
ஒரு துறையில் GE விகிதம் 30%க்குக் கீழ் இருந்தால், அந்த துறையை மீளாய்வு செய்யும் அரசுக் கொள்கை ஏற்கனவே உள்ளது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
மலேசியாவின் "Centre for Future Labour Market Studies (EU-Era)" வெளியிட்ட ஆய்வில், மாணவர்கள் 78.7% பேர், பணி வாழ்க்கைக்குத் தேவையான திறன்களுடன் முழுமையாக தயாராக இல்லை எனக் கூறப்பட்டுள்ளது
மேலும், படித்த துறையில் அவர்கள் பணியாற்றவில்லை என்று 52.8% பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்
பெரும்பாலானவர்கள், விருப்பதற்கு மாறாக அந்தத் தவறான பணிகளிலேயே தொடர்கின்றனர், இது அவர்களது தொழில்முனைவைத் தடுக்கும் ஒரு முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது
30%க்குக் கீழ் வேலைவாய்ப்பு வாய்ப்பு கொண்ட துறைகள் மறுபரிசீலனை செய்யப்படும். கல்வி - தொழில் சந்தை இடையிலான இடைவெளி குறைக்கப்பட வேண்டும் படிப்புகள் வேலைவாய்ப்பு மையமாக மாற வேண்டும் என்பது அரசின் நோக்கம் டத்தோ முஸ்தபா சாக்மூட் விளக்கம் அளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm