நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீதித்துறை பிரச்சினையில் யூ-டர்ன் செய்த நபராக அன்வாரை  மக்கள் நினைவில் கொள்வார்கள்: ரபிசி எச்சரிக்கை

கோலாலம்பூர்:

நீதித்துறை பிரச்சினையில் யூ-டர்ன் செய்த நபராக டத்தோஶ்ரீ அன்வாரை மக்கள் நினைவில் கொள்வார்கள்.

முன்னாள் அமைச்சர் ரபிசி ரம்லி இவ்வாறு எச்சரித்துள்ளார்.

நீதித்துறை நியமனங்களில் தலையிட வேண்டாம். அவ்வாறு செய்வது  உங்களின் மரபை கெடுக்கும்.

ஒரு குறிப்பிட்ட நீதிபதியை தலைமை நீதிபதி பதவிக்கு உயர்த்தும் திட்டத்திற்கு இணக்கம் தெரிவித்து உங்களின் அனைத்து சீர்திருத்த முயற்சிகளையும் வீணடித்து விடுவீர்கள்.

ஆகவே இந்த விஷயத்தில் சிந்தித்து தலையிடாமல் இருப்பது உங்களுக்கு நல்லது.

நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கலாம், அமைச்சரவைக்கும் பொதுமக்களுக்கும் விளக்கலாம். நாடாளுமன்றத்தில் பதிலளிக்கலாம்.

ஆனால் இந்த பிரச்சினையின் சாராம்சம் என்னவென்றால், நீங்கள் நீதிபதிகளை நியமிப்பதைத் தொடர்ந்தால் அனைவரும் அறிந்தபடி பாதிப்பு உங்களுக்கு தான்.

இது அன்வாருக்கு எனது செய்தி. எதுவாக இருந்தாலும், இது உங்கள் மரபை நீங்கள் காப்பாற்ற வேண்டும்.

வரவிருக்கும் பல காலாண்டுகளுக்கு நீதித்துறை பிரச்சினையில் யூ-டர்ன் செய்த நபராக அன்வாரை மக்கள் நினைவில் கொள்வார்கள் என்று ரபிசி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset