
செய்திகள் மலேசியா
சாலையில் யானையைக் கடந்து வேகமாக சென்ற ஓட்டுநரின் செயலுக்குப் பொது மக்கள் கண்டனம்
கிரிக்:
பேராக்கின் கிரிக் சாலையில் யானையைக் கடந்து செல்ல முயற்சித்த மைவி கார் ஓட்டுநரின் பொறுப்பற்ற செயலுக்குப் பொது மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Mamukhabir என்ற டிக் டாக் கணக்கில் பகிரப்பட்டுள்ள காணொலியில் சாலையோரத்தில் யானை நின்று கொண்டிருந்த போதும் கார் ஓட்டுநர் வேகமாகச் செல்ல முயன்றதைக் காண முடிந்தது.
சாலையில் யானை செல்லும்போது வாகனத்தைச் செலுத்த கூடாது என்ற சிந்தனை ஓட்டுநருக்கு இல்லை என்றும் நல்வாய்ப்பாக அவர் ஓட்டுநர் யானையிடம் மிதிப்படவில்லை என்றும் அக்காணொலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யானை அருகில் வரத் தொடங்கியப் பின் தான் அவர் காரை நிறுத்தியுள்ளார்.
கார் ஓட்டுநரின் செயலுக்குப் பொது மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மற்ற நாடுகளில், ஒரு சிறிய பறவை கூட கடக்கும் வரை மக்கள் காத்திருக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் ஓட்டுநர்களுக்கு வனவிலங்கு மீது அக்கறை இல்லை என்று பயனர் தெரிவித்துள்ளார்.
இது போன்ற செயலால் யானை அச்சமடைந்து தாக்க தொடங்கியிருந்தால் விளைவுகள் தீவிரமாக இருந்திருக்க கூடும் என்று மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm
எஸ்டிஆர், ரஹ்மா உதவித் தொகை திட்டங்களை அரசாங்கம் தொடரும்: பிரதமர்
July 31, 2025, 1:23 pm
தேசிய தரவு ஆணையம் விரைவில் நிறுவப்படும்: பிரதமர்
July 31, 2025, 1:00 pm