செய்திகள் மலேசியா
பள்ளத்தாக்கில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ஆடவர் கொலை செய்யப்பட்டுள்ளார்: போலிஸ்
ஈப்போ:
பள்ளத்தாக்கில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ஆடவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாப்பா போலிஸ் தலைவர் ஜொஹாரி யாஹ்யா இதனை தெரிவித்தார்.
தாப்பாவுக்கு அருகிலுள்ள கம்போங் பத்து 23 இல் உள்ள பள்ளத்தாக்கில் நேற்று ஒரு ஆடவரின் உடல் கண்டெடுக்கப்படந்து.
இந்த வழக்கை போலிசார் கொலை வழக்காக வகைப்படுத்தியுள்ளனர்.
ஈப்போவின் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் தடயவியல் பிரிவு நடத்திய பிரேத பரிசோதனையின் முடிவுகளில் இது உறுதி செய்ய்யப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்குக் காரணம் ஒரு பொருளால் தாக்கப்பட்டதே என்று கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் தலை, முகம், மார்பு, உடலின் பின்புறம், இரு கைகளிலும் காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் இருந்தன.
மேலும் மரணத்திற்கான காரணம் ஒரு ஆயுதத்தால் தாக்கப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், சந்தேக நபரைக் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜொஹாரி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2026, 8:14 pm
அரச நிறுவனங்களை மதிப்பதுடன் 3ஆர் பிரச்சினைகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்: ஜாஹித்
July 27, 2026, 8:12 pm
முட்டைகள் வாங்கியபோது முகமூடி அணிந்த சந்தேக நபரால் சுடப்பட்டதில் ஆடவர் காயம்
July 27, 2026, 8:10 pm
ஒற்றுமையும் வேல் சக்தியும் இந்திய மாணவர்களின் கல்வி வெற்றிக்கு வழிகாட்டும்: சுரேன் கந்தா
July 27, 2026, 8:08 pm
