நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்லாமிய ஸ்டேட் பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான நடவடிக்கைகள் இருக்கிறதா என்பதை மாணவர்களிடையே உயர்க்கல்வி அமைச்சு கண்காணித்து வருகிறது

கோலாலம்பூர்: 

இஸ்லாமிய ஸ்டேட் எனப்படும் பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து மாணவர்களிடம் கண்காணிக்கப்படுவதாக மலேசிய உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் கூறினார். 

36 வங்காளதேச நாட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் நாட்டில் இது குறித்த நடவடிக்கைகள் இருக்கிறதா என்பதை அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 

பயங்கரவாத சித்தாந்தங்கள் நாட்டில் குறிப்பாக உயர்க்கல்வி மாணவர்கள் இதில் ஈர்க்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் அவர் திட்டவட்டமாக சொன்னார். 

முன்னதாக, செத்தியாவங்சா அம்னோ பிரிவு கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு அமைச்சர் ஸம்ரி அப்துல் கடீர் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset