நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உள்ளூர் நடிகையிடம் பாலியல் வன்கொடுமை; பூசாரியின் கடப்பிதழ் முடக்கப்பட்டது: போலிஸ்

சிப்பாங்:

உள்ளூர் நடிகையிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக நம்பப்படும் பூசாரியின் கடப்பிதழ் முடக்கப்பட்டது.

சிப்பாங் மாவட்ட போலிஸ் தலைவர் நோர்ஹிசாம் பஹாமன்  இதனை தெரிவித்தார்.

பண்டார் பாரு சலாக் திங்கியில் உள்ள ஒரு ஆலயத்தில் உள்ளூர் நடிகையிடம் பூசாரி ஒரு காமச் சேட்டையை புரிந்துள்ளார்.

சம்பந்தப்பட்ட இந்திய நாட்டைச் சேர்ந்த பூசாரியிம் கடப்பிதழை போலிசார் முடக்கியுள்ளனர்.

அந்த ஆடவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதைத் தடுக்க வேண்டும்.

மேலும் விசாரணைகள் தொடரும் வரை சந்தேக நபர் மலேசியாவிற்குள் இருப்பதை உறுதி செய்ய இந்த விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இன்னும் நாட்டில் இருப்பதை சோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன

மேலும் அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று அவர்  தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset