நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடினமான காலங்களில் தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதாக மிரட்ட வேண்டாம்: ஜாஹித்

கோலாலம்பூர்:

கடினமான காலங்களில் தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதாக மிரட்ட வேண்டாம்.

தேசிய முன்னணி தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

தற்போது மீட்புப் பணியில் உள்ள தேசிய முன்னணியில்  இருந்து வெளியேறும் அச்சுறுத்தலை எந்தவொரு குழுவும் எழுப்பக்கூடாது.

இந்தக் கடினமான காலங்களில், தனது கட்சி மசீச, மஇகா, பிபிஆர்எஸ் ஆகியவற்றை ஓரங்கட்டாது.

அதன் நிலையை வலுப்படுத்த ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் என்றும் அம்னோ தலைவருமான அவர் கூறினார்.

ஒரு காலத்தில் நாட்டின் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய தேசிய முன்னணி இப்போது 30 நாடாளுமன்ற இடங்களை மட்டுமே கொண்டுள்ளது

அம்னோ (26), மசீச(2), மஇகா, பிபிஆர்எஸ் தலா ஒரு இடத்தைப் பிடித்துள்ளன.

இந்நிலை மாற வேண்டும். தேசிய முன்னணி மீண்டும் வலுப்பெற வேண்டும். இதற்கு அனைவரின் ஆதரவும் தேவை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset