நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்து சமய விவகாரத்தில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆவதை தடுத்து நிறுத்த வேண்டும்: தங்க கணேசன்

பெட்டாலிங்ஜெயா:

இந்து சமய விவகாரத்தில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இதுவே எங்களின் நோக்கம் என்று மலேசிய இந்து சங்கத்தின் நடப்பு தலைவர் தங்க கணேசன் கூறினார்.

மலேசிய இந்து சங்கத்தின் பேராளர் மாநாடும் தேர்தலும் வரும் ஜூலை 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இம்முறை 27 உச்சமன்ற உறுப்பினர்களுக்கான பதிவியில் 10 இடங்கள் காலியாகி உள்ளது.

இந்த 10 இடங்களுக்கு எனது தலைமையில் 10 பேர் போட்டியிடுகின்றனர்.

குறிப்பாக எனது அணியில் இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ மோகன் ஷானும் போட்டியிடுகிறார் என்பது தான் குறிப்பிடத்தக்கது.

மலேசிய இந்து சங்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். குறிப்பாக சங்கத்தில் உள்ள பிளவுகளை களைய வேண்டும்.

குறிப்பாக இந்து சமயம் என்றாலே தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகி விடுகிறார்கள். இதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இதன் அடிப்படையில் தான் மலேசிய இந்து சங்க தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம்.

ஆகவே மலேசிய இந்து சங்கத்தின் சிறந்த எதிர்காலத்தை கருத்தில் உறுப்பினர்கள் எங்களுக்கு முழு ஆதரவு தர வேண்டும் என்று தங்க கணேசன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset