
செய்திகள் மலேசியா
திருமண நகைகள் போலி: அறிந்து அதிர்ந்த தனித்து வாழும் தாய்!
மலாக்கா, ஜூலை 12:
தனது திருமணத்தில் பெற்ற நகைகள் உணமையான தங்கம் என்று நம்பி வாழ்ந்த தனித்து வாழும் தாய், 17 ஆண்டுகளுக்குப் பிறகு அவை போலியானவை என தெரிய வந்ததும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
45 வயதுடைய ஏலிஸ் என்ற இவர், மலாக்காவைச் சேர்ந்தவர். 2022ஆம் ஆண்டு தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார், தற்போது 14 வயதுடைய மகனை தனியாக வளர்த்தும் வருகிறார்.
அண்மையில் ஏற்பட்ட விபத்து மற்றும் பல சிக்கல்களால் பொருளாதாரமாக கடுமையாக பாதிக்கப்பட்ட ஏலிஸ், தன் திருமண நகைகளில் ஒன்றை அடகு வைக்க தீர்மானித்தார். ஆனால், அந்த நகை கடையில் கொண்டு சென்றபோது, அதே நிமிடத்தில் அதிர்ச்சி செய்தியை எதிர்கொண்டார்.
“மூன்று தங்கச் சங்கிலிகள் மற்றும் ஒரு தங்கக் கட்டி என, சுமார் சில ஆயிரம் மலேசிய ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் என்று நினைத்திருந்தேன். ஆனால் கடையில் நகைகள் போலியானவை என்றும், எந்த மதிப்பும் இல்லையென்றும் கூறப்பட்ட போதும் எனது கால்கள் நிலைகுலைந்தன,” என அவர் கூறினார்.
“இது என்னை நெஞ்சை பதற வைக்கும் அனுபவமாக இருக்கிறது. இது என் வாழ்க்கையின் பழிவாகும் பாடமாக அமைந்தது. மற்ற பெண்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்,” எனக் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 1:47 pm
தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி; 100 அணிகள் பங்கேற்றுள்ளன: பத்துமலை
July 12, 2025, 12:18 pm
மலாக்காவில் ரிக்ஷா சேவைக்கு இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்
July 12, 2025, 11:28 am
இணைய மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
July 12, 2025, 10:52 am