
செய்திகள் மலேசியா
நிர்வாணத்துடன் கூடிய தவறான சமய சடங்கு கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் விசாணைக்கு அழைப்பு: போலிஸ்
ஷாஆலம்:
நிர்வாணத்துடன் கூடிய தவறான சமய சடங்கு கருத்தரங்கில் பங்கேற்றவர்களை போலிசார் விசாணைக்கு அழைத்துள்ளனர்.
ஷாஆலம் போலிஸ் தலைவர் முகமட் இக்பால் இப்ராஹிம் இதனை கூறினார்.
ஷாஆலமில் உள்ள ஒரு மாநாட்டு மையத்தில் நடந்த குடும்ப ஊக்குவிப்பு நிகழ்ச்சியின் போது ஒழுக்கக்கேடான செயல்கள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து போலிசார் விசாணையைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவரின் கணவரால் இந்த விஷயம் குறித்து புகார் அளிக்கப்பட்டது.
புகார்தாரரின் மனைவி, சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பல சாட்சிகளை வாக்குமூலங்களைப் பதிவு செய்ய அழைத்துள்ளோம்.
இந்த அமர்வுக்கு சிலாங்கூர் இஸ்லாமிய மதத் துறையின் (ஜாய்ஸ்) பிரதிநிதிகளையும் அழைத்துள்ளோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 1:47 pm
தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி; 100 அணிகள் பங்கேற்றுள்ளன: பத்துமலை
July 12, 2025, 12:18 pm
மலாக்காவில் ரிக்ஷா சேவைக்கு இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்
July 12, 2025, 11:28 am
இணைய மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
July 12, 2025, 10:52 am