நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாயுடன் ஒரு நாள் வெளியே சென்ற மகள்:  நெஞ்சை உருக்கும் வீடியோ சமூக ஊடக்த்தில் வைரல்

மலாய் சமுகத்தைச் சேர்ந்த இளம்பெண் , தனது தாயுடன் ஒரு எளிய நாளைச் செலவிட்ட வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. TikTok பயனர் @ttdoyulovme பகிர்ந்த இந்த வீடியோ, பலரது இதயங்களை நெகிழவைக்கும் வகையில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், அவர் தனது தாயை அழைத்து சென்று, spaghetti bolognese, matcha மற்றும் pastries சாப்பிடச் செய்துள்ளார். பின்னர் ஒரு புதிய blender வாங்கித் தருவதோடு, RM300 பணத்தை கையில்கொடுத்து மகிழ்வித்துள்ளார். இந்த செயலை அவர் "ஒரு சின்ன விளையாட்டு போல" எடுத்துக்கொண்டார்.

நான் என் வாழ்க்கையில் மிகவும் பிஸியாக இருக்கிறேன். அம்மாவுக்காக நேரம் ஒதுக்கவே முடியவில்லை.
மன்னிக்கணும் அம்மா, இப்போ இதுதான் என்னால் முடிகிறது.
எனக்கு என்றும் வளமான வருமானம் அமைய, மேலும் கொடுக்க முடிய என் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட வேண்டும். பிரார்த்தனை பண்ணுங்க." என்றும் அந்த இளம் பெண் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவின் கீழ்  இனம், மொழி கடந்து மலேசியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.

இந்த பதிவு பலரது எண்ணங்களை நெகிழவைக்கும் வகையில் இருந்தது. பலரும் தங்கள் தாயுடன் செலவிட முடியாத தருணங்களை நினைத்து கண்கலங்கியுள்ளனர்:

"நான் மேல்நிலை பள்ளியில் இருந்தபோதே அம்மா இறந்துவிட்டார். இப்போது வேலை செய்து வருகிறேன்... ஆனால் அவர் இங்கே இல்லை," என ஒரு பயனர் கூறினார்.

"அம்மா இன்னும் இருக்கிறார். ஆனால் படுக்கையில்தான் இருக்கிறாங்க... இப்படி வெளியே அழைத்துச் செல்ல முடியவில்லை," என மற்றொரு பதிவாளர் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

"என்னிடம் கார் இல்லை. பைக்கில்தான் அம்மாவை அழைத்துச் செல்கிறேன். ஒருமுறை வெயிலிலும் அவரை இரண்டு நாட்கள் வெளியில்  சுற்ற அழைத்துச் சென்றேன். ஆனால் அவர் பெரிதும் மகிழ்ந்தார் என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ, பல இளைஞர்களுக்கும் தொலைந்த நேரத்தை நினைவு கூறச் செய்ததோடு, தங்கள் பெற்றோர்களுடன் நேரம் செலவிட முனைந்த பலருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது.

“ஒரு நாளையாவது உங்கள் தாயருக்காக செலவிடுங்கள். அது அவர்களுக்குப் பெரிய வரமாகும்; உங்களுக்குப் பொன்னான நினைவாகும்,” என்பதே இவ்வீடியோவின் உண்மையான செய்தி.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset