செய்திகள் மலேசியா
தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி; 100 அணிகள் பங்கேற்றுள்ளன: பத்துமலை
சுங்கைபூலோ:
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி 100 அணிகள் பங்கேற்றுள்ளன.
அக்கால்பந்து சங்கத்தின் தலைவர் பத்துமலை இதனை கூறினார்.
சிலாங்கூர் – கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டி 21ஆம் ஆண்டாக நடைபெறுகிறது.
சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கம், சிலாங்கூர் – கூட்டரசுப் மாநில தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் மன்றம், மஇகா உட்பட பலரின் ஆதரவில் இந்த போட்டி நடைபெறுகிறது.
இம்முறை மாணவர்கள் பிரிவில் 68 குழுக்களும் மாணவிகள் பிரிவில் 32 குழுக்களும் பங்கேற்றுள்ளன.
ஆக மொத்தம் இம்முறை 100 குழுக்கள் பங்கேற்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு நமச்சிவாயம் கிண்ணமும், பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு ரவீந்திரன் கிண்ணமும் பரிசாக வழங்கப்படும்.
குறிப்பாக ஆண், பெண் இரு பிரிவுகளிலும் வெற்றி பெறும் முதல் அணிக்கு தலா 2000 ரிங்கிட் பரிசாக வழங்கப்படும்.
இரண்டாவது இடத்திற்கு 1,000 ரிங்கிட்டும் மூன்றாவது நான்காவது இடத்திற்கு தலா 500 ரிங்கிட்டும் பரிசாக வழங்கப்படும்.
5, 6ஆம் இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு 250 ரிங்கிட்டும் 7 முதல் 16ஆவது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா 100 ரிங்கிட்டும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
மேலும் சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மன்றத்தின் சார்பிலும் வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கப்பரிவுகள் வழங்கப்படவுள்ளது.
தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியின் தொடக்க விழாவிற்கு பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பத்துமலை இவ்வாறு கூறினார்.
சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் உதவித் தலைவர் டத்தோ சுகு, மஇகா விளையாட்டு பிரிவுத் தலைவர் அண்ட்ரூ டேவிட், முன்னாள் கால்பந்து ஜாம்பவான்களான டத்தோ டோலா சாலே, டத்தோ ஜைனால் அபிடின், சங்கத்தின் துணைத் தலைவர் கென்னத் கண்ணா, குணா உட்பட பலர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
டத்தாரான் காஜாங் மைதான சதுக்கம் இன்று தொடங்கி ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது
August 11, 2026, 11:16 am
தபோங் ஹாஜியின் RCI அறிக்கையை விவாதிக்க மறுப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு
August 11, 2026, 10:45 am
தபோங் ஹாஜி RCI சிறப்பு மக்களவை கூட்டத்தில் பங்கேற்க முடியாதத்தற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் மன்னிப்பு
August 11, 2026, 9:18 am
