நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் பொறுப்பை மீண்டும் கைப்பற்றுவது எனது நோக்கமல்ல: டத்தோ மோகன்ஷான்

பெட்டாலிங்ஜெயா:

மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் பொறுப்பை மீண்டும் கைப்பற்றுவது எனது நோக்கமல்ல.

அச்சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ மோகன்ஷான் இதனை கூறினார்.

மலேசிய இந்து சங்கத்தின் உச்சமன்ற உறுப்பினர் பதவிக்கு நான் போட்டியிடுகிறேன்.

 இதனால் மோகன்ஷான் மீண்டும் மலேசிய இந்து சங்கத்தின் தலைவராக போகிறார்.

தலைவர் பதவிக்கான வெறி அவருக்கு அடங்கவில்லை என்று பலர் குற்றம் சாட்ட தொடங்கி விட்டன.

மலேசிய இந்து சங்கத்தின் நலன் தான் எனக்கு முக்கியம். அச்சங்கம் எந்தவொரு சூழ்நிலையிலும் முடங்கி போய்விடக்கூடாது.

இதன் அடிப்படையில் தான் நான் மீண்டும் உச்சமன்றத்திற்கு நான் போட்டியிடுகிறேன்.

இதை தவிர்த்து எனக்கு எந்தவொரு உள் நோக்கமும் இல்லை. 

குறிப்பாக நான் மீண்டும் மலேசிய இந்து சங்கத்தின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்க மாட்டேன்.

எங்கள் அணி வெற்றி பெற்றால் நடப்பு தலைவர் தங்க கணேசன் தான் அப்பதவியை வகிப்பார்.

இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்று டத்தோ மோகன்ஷான் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset