
செய்திகள் மலேசியா
மலாக்காவில் ரிக்ஷா சேவைக்கு இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்
மலாக்கா:
மலாக்கா மாநிலத்தில் ரிக்ஷா சேவைக்கு இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரிக்ஷாவில் செல்ல விரும்பும் சுற்றுப்பயணிகள் 'iTrafik MBMB என்ற செயலியின் வழி பயணச் சேவைக்கு முன் பதிவு செய்யலாம்.
இதுவரை மலாக்கா மாநகர மன்றத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சுமார் 300 உரிமம் பெற்ற ரிக்ஷா ஓட்டுநர்கள் இந்தப் புதிய தளத்தில்இணைக்கப்பட்டுள்ளனர் என்று அம்மாநில மேயர் Datuk Shadan Othman தெரிவித்தார்.
அதனால் சுற்றுப்பயணிகள் எவ்வித அச்சமுமின்றி நம்பிக்கையாக இந்தச் செயலியைப் பயன்படுத்தி ரிக்ஷா சேவைக்கு உன் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் மேயர் தெரிவித்தார்.
இந்த செயலி பயனர்கள் விரும்பும் ரிக்ஷா ஓட்டுநரை தேர்ந்தெடுக்கவும், அந்த ஓட்டுநரின் பெயர், புகைப்படம் மற்றும் தொடர்பு எண் போன்ற முக்கிய தகவல்களையும் பார்க்கவும் அனுமதிக்கிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 1:47 pm
தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி; 100 அணிகள் பங்கேற்றுள்ளன: பத்துமலை
July 12, 2025, 11:28 am
இணைய மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
July 12, 2025, 10:52 am