
செய்திகள் மலேசியா
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு கால்பந்து பயிற்சி பட்டறை; சிலாங்கூர் கால்பந்து சங்கம் நடத்தும்: டத்தோ சுகு
சுங்கைபூலோ:
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு கால்பந்து பயிற்சி பட்டறையை சிலாங்கூர் கால்பந்து சங்கம் ஏற்று நடத்தும்.
சிலாங்கூர் கால்பந்து சங்கம் கால்பந்து சங்கத்தின் தலைவர் டத்தோ சுகு இதனை கூறினார்.
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி இன்று நடைபெறுகிறது.
கிட்டத்தட்ட 100க்கும் மேற்ப்பட்ட அணிகள் இதில் கலந்து கொண்டுள்ளன. குறிப்பாக பெண்கள் அணியும் இப்போட்டியில் பங்கேற்றுள்ளன.
இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. நமது பிள்ளைகள் மிகவும் திறமையான முறையில் கால்பந்து விளையாடுகின்றனர்.
இதன் அடிப்படையில் தான் இப்போட்டியில் சிறந்து விளங்கும் விளையாட்டாளர்களுக்காக பயிற்சி பட்டறை நடத்தப்படவுள்ளது.
சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கத்தின் ஆதரவுடன் இப்பயிற்சி பட்டறை நடத்தப்படும்.
நமது மாணவர்களின் கால்பந்து விளையாட்டின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இப்பட்டறை நடத்தப்படுகிறது என்று டத்தோ சுகு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 1:47 pm
தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி; 100 அணிகள் பங்கேற்றுள்ளன: பத்துமலை
July 12, 2025, 12:18 pm
மலாக்காவில் ரிக்ஷா சேவைக்கு இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்
July 12, 2025, 11:28 am
இணைய மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
July 12, 2025, 10:52 am