நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலயம், சமயப் பிரச்சினைகளுக்காக மஹிமா உட்பட எந்த இயக்கங்களுடன் இணைந்து செயலாற்ற நாங்கள் தயார்: கணேஷ்பாபு

கோலாலம்பூர்:

ஆலயம், சமயப் பிரச்சினைகளுக்காக மஹிமா உட்பட எந்த இயக்கங்களுடன் இணைந்து செயலாற்ற நாங்கள் தயாராக உள்ளோம்.

மலேசிய இந்து சங்க தேர்தலில் போட்டியிலும் மறுமலர்ச்சி அணியின் தலைவர் கணேஷ்பாபு இதனை கூறினார்.

மலேசிய இந்து சங்கத்தின் தேர்தலில் இரு அணிகள் போட்டியிடுகிறது. 

எனது தலைமையிலான அணி  மறுமலர்ச்சி மாறுவோம் மாற்றுவோம்  என்ற இலக்குடன் போட்டியிடுகிறது.

குறிப்பாக தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இது தான் முக்கிய நோக்கமாகும்.

கடந்த 2022 தேர்தலில் வெற்றி பெற்ற போது அனைவரும் என்னை தான் தலைவராக வர வேண்டும் என முன்மொழிந்தனர்.

நான் தான் தங்க கணேசன் தலைவராக கொண்டு வந்தேன். ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் இம்முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் அந்த ஒப்பந்தத்தை மறுந்து விட்டு தற்போது மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.

அதே வேளையில் மலேசிய இந்து சங்கம் பல பின்னடைவுகளை எதிர்நோக்கி வருகிறது.

இந்நிலை மாற வேண்டும். இந்து சங்கம் மேலும் வலுப்பெற வேண்டும். இந்துகளுக்கு என போராட இந்து சங்கம் பலமாக இருக்க வேண்டும். 

இதுவே நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு முக்கிய காரணமாகும்.

ஆகையால் மலேசிய இந்து சங்க உறுப்பினர் எங்கள் அணிக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மலேசிய இந்து சங்கம் இந்துகளுக்கான தாய் சங்கமாக இருந்தாலும் ஆலயம், சமயப் பிரச்சினைகளுக்காக யாருடன் இணைந்து செயலாற்ற நாங்கள் தயாராக உள்ளோம்.

இதில் மஹிமா உட்பட எந்த இயக்கங்களாக இருந்தாலும் நாங்கள் இணைந்து செயலாற்றுவோம் என்று கணேஷ்பாபு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset