நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இணைய மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 

பெட்டாலிங் ஜெயா: 

நாட்டில் இணைய மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை குறிப்பாக செந்தூல் போன்ற நகர்ப்புறகளில் அதிகரித்துள்ளதாக செந்தூல் மாவட்டக் காவல்துறை குற்றத் தடுப்பு, சமூகப் பாதுகாப்புத் துறை செயல்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்புப் பிரிவுத் தலைவர் உதவி கண்காணிப்பாளர் Peter Lucy தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை, செந்துல் மாவட்டத்தில் 262 மோசடி சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 206 மோசடி சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் இந்த எண்ணிக்கை இவ்வாண்டின் 6 மாதங்களில் உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

இதில் SMS, இணையம், காதல் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் வழியாக நடைபெறும் பல மோசடிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மோசடி செய்பவர்கள் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இணைய மோசடிகளால் கிடைக்கபெறும் பணத்தைக் கொண்டு மலேசியாவில் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ்கிறார்கள் என்றும்  Peter Lucy மேலும் கூறினார்.

சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை (transactions) புகார் செய்ய, 997-க்கு உடனே அழைக்க பொது மக்களுக்கு பீட்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset