
செய்திகள் மலேசியா
நிர்வாணத்துடன் கூடிய சமய சடங்குகளை ஊக்குவிக்கும் திட்டத்தை ஜாய்ஸ் உடனடியாக விசாரிக்க வேண்டும்: மந்திரி புசார்
ஷாஆலம்:
நிர்வாணத்துடன் கூடிய சமய சடங்குகளை ஊக்குவிக்கும் திட்டத்தை ஜாய்ஸ் உடனடியாக விசாரிக்க வேண்டும்.
சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
ஷாஆலமில் உள்ள ஒரு மாநாட்டு மையத்தில் நடந்த குடும்ப கருத்தரங்கு நிகழ்ச்சியின் போது ஒழுக்கக்கேடான நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகளை சிலாங்கூர் இஸ்லாமிய மதத் துறை (ஜாய்ஸ்) விசாரிக்க வேண்டும்.
முழுமையான விசாரணைக்குப் பிறகு குற்றச்சாட்டுகள் உண்மை எனக் கண்டறியப்பட வேண்டும்.
இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
புகார் இப்போதுதான் கிடைத்தது. ஜாய்ஸை விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏனெனில் அது ஒரு மண்டபத்தில் ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் மாநில அரசாங்கத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 1:47 pm
தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி; 100 அணிகள் பங்கேற்றுள்ளன: பத்துமலை
July 12, 2025, 12:18 pm
மலாக்காவில் ரிக்ஷா சேவைக்கு இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்
July 12, 2025, 11:28 am
இணைய மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
July 12, 2025, 10:52 am