
செய்திகள் மலேசியா
ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை துவக்க விழா, மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் கவிக்கோ அப்துர் ரஹ்மான் நினைவு ஆய்வு இருக்கை அமைத்து நிதி வழங்கும் விழா
கோலாலம்பூர்:
மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறையில் ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை சார்பில் கவிக்கோ அப்துர் ரஹ்மான் நினைவு ஆய்வு இருக்கை அமைக்கும் நிகழ்ச்சி ஜூலை 17 ஆம் தேதி காலை 9.00 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இதன் ஒருங்கிணைப்பு பணிகளை இஸ்லாமியக் கல்வி வாரியம் மேற்கொண்டுள்ளது.
ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை சார்பில் இந்திய ஆய்வியல் துறைக்கு நிதி வழங்கி கவிக்கோ அப்துர் ரஹ்மான் நினைவு ஆய்வு இருக்கை அமைக்கும் நிகழ்ச்சியைத் அதிகாரப்பூர்வமாக உயர் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காதிர் துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்..
மலாயா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர். டத்தோஸ்ரீ டாக்டர். நூர் அசுவான் அபு உஸ்மான் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமியக் கல்வி வாரியத் தலைவரும் ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவருமான டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் துவக்கவுரை நிகழ்த்துகிறார் என்று இந்திய ஆய்வியல் துறைத் தலைவர் முனைவர் ரவீந்திரன் கூறினார்.
உயர் கல்வி அமைச்சருக்கும் பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் முஸ்தபா அறக்கட்டளைத் தலைவர் முஸ்தபா அவர்கள் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பு செய்வார். அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாவதோடு நிதிக்குரிய காசோலையையும் அவர் வழங்க இருக்கிறார்.
இரண்டு அமர்வுகளாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இலக்கிய கருத்தரங்கு ம இ கா துணைத்தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான பைந்தமிழ் சுடர் டத்தோஸ்ரீ எம் சரவணன் தலைமையில் நடைபெற உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் அப்துல் சமத் சிறப்புரையாற்ற இருக்கிறார்.
பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம் நெறியாளராக இருந்து வழிநடத்தும் கருத்தாடல் நிகழ்ச்சியில் இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ரமீஸ் அப்துல்லாஹ், சிங்கப்பூர் எழுத்தாளர் சங்கத்தின் மேனாள் தலைவர் ஆண்டியப்பன், சிராங்கூன் டைம்ஸ் இதழாசிரியர் ஷா நவாஸ், இந்திய ஆய்வியல் துறை விரிவுரையாளர் முனைவர் சில்லாழி கந்தசாமி ஆகியோர் இலக்கிய உரை ஆற்ற இருக்கின்றார்கள்.
மாசா பல்கலைக்கழக நிறுவனரும் தலைவருமான செனட்டர் டான்ஸ்ரீ டாக்டர் முஹம்மது ஹனீபா நிறைவுரை ஆற்ற இருக்கின்றார்கள்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்களும் இலக்கிய சுவைஞர்களும் கலந்து சிறப்பிக்க வேண்டும் என்று துறைத் தலைவர் முனைவர் ரவீந்திரன் கேட்டுக்கொண்டார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 1:47 pm
தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி; 100 அணிகள் பங்கேற்றுள்ளன: பத்துமலை
July 12, 2025, 12:18 pm
மலாக்காவில் ரிக்ஷா சேவைக்கு இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்
July 12, 2025, 11:28 am
இணைய மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
July 12, 2025, 10:52 am