நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹஜ்ஜிலிருந்து திரும்பிய தாத்தா: பேரக்குழந்தைகளுக்காக ஒட்டகப் பொம்மைகள் குவியலை  கொண்டு வந்த வீடியோ வைரல்

கோலாலம்பூர்: 
ஹஜ் கடமையை முடித்துத் நாடு திரும்பிய ஒரு  தாத்தா, தனது பேரக்குழந்தைகளுக்காக பல ஒட்டகப் பொம்மைகளை உடலில் கட்டி கொண்டு வந்த வீடியோ TikTok-ல் வைரலாகியுள்ளது.

KLIA விமான நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட அந்தக் காட்சியில், தாத்தா ஒருவர் தனது மனைவியுடன் வரும்போது, அவரது முன்னிலையில் ஒரு லக்கேஜ் டிராலி, உடலில் கட்டியிருந்த பல வகையான ஒட்டகப் பொம்மைகள் ஆகியவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

அதைத் தொடர்ந்து, அவரது பேரக்குழந்தைகள் ஓடி வந்து அன்புடன் அவரை வரவேற்கும் காட்சியும் இதில் இடம் பெற்றுள்ளது.

TikTok பயனர் @nd_kh4n பதிவிட்ட இந்த வீடியோ, நெட்டிசன்களின் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. “யாரையும் தவறவிடாமல் நினைத்த தாத்தாவின் அன்பு இதயத்தைக் தொடுகிறது” என பலரும் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ, மலேசிய குடும்பப் பாசத்தின் இனிய நினைவாக சமூக ஊடகங்களில் பரவியுள்ளது. இனம் சமயம் கடந்து அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். இதுவரையில் இந்த காணொலியை 62 லட்சம் பேர் பார்த்துள்ளார்கள்.

தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset