நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரியான தொகுதியில் போட்டியிட்டால் மசீச மலாய்க்காரர்களின் வாக்குகளைப் பெறும்: Ti Lian Ker

பெட்டாலிங் ஜெயா:

16-ஆவது பொது தேர்தலில் மசீச-விற்கு சரியான தொகுதிகளை வழங்கினால் அக்கட்சி மலாய்க்காரர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக  மசீச-வின் முன்னாள் துணை தலைவர் Ti Lian Ker கூறியுள்ளார்.

மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் மசீச டிஏபி-க்கு எதிராக களமிறக்கப்பட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். 

தற்போது அம்னோ அதிக நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ள டிஏபி-யைச் சார்ந்து செயல்படுகிறது. 

மசீச மீது அம்னோவிற்கு நம்பிக்கை குறைந்துள்ளதாகவும் Ti Lian Ker குறிப்பிட்டார். 

தற்போதைய சூழலில் பகாங் மாநிலத்தில் மசீச டிஏபி-க்கு எதிராக போட்டியிட்டால் அக்கட்சி அதிக தொகுதிகளில் நிச்சயம் வெல்லும் என்று அவர் தெரிவித்தார். 

குறிப்பாக, ராவூப் தொகுதியில் டிஏபி-க்கு எதிராக மசீச போட்டியிட்டால் அக்கட்சி மலாய் வாக்காளர்களின் வாக்குகளை அதிகளவில் பெறும் என்று  அவர் சுட்டிக் காட்டினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset